சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.68 இலட்சம்  கன அடி தண்ணீர் திறப்பு4மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.

by Editor / 02-12-2024 10:44:01am
சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.68 இலட்சம்  கன அடி தண்ணீர் திறப்பு4மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்தி 68 ஆயிரம் கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணகிரி மற்றும் அதனை ஒட்டி உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1 லட்சத்தி 68 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. சாத்தனூர் அணையின் முழு உயரும் 119 அடியாகவும். தற்போது சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்தி 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சாத்தனூர் அணை நீர்மட்டம் 118.95 அடியாக உயர்ந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்கும் நிலையில் சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையின் பின்பக்க 11 மதகுகள் வழியாக 1 லட்சத்தி 68 ஆயிரம் கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குழந்தைகளை ஆற்றில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என பொதுப்பணி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தென்பெண்ணையாற்றில் 1 லட்சத்தி 68 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Tags : சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.68 இலட்சம்  கன அடி தண்ணீர் திறப்பு4மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.

Share via