"துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல" - நீதிமன்ற அதிருப்தி

மதுரை: ரவுடி வெள்ளைக்காளி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (ஏப்.17) உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது, "தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுண்டர்கள் அதிகரித்து உள்ளன. காவல் துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல, தற்காப்பிற்கு தான். காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள். காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். சமீபமாக எத்தனை என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன?” என காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Tags :