மதுரையில் வருகிற 22 ம் தேதி ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தமிழக முதல்வர் அவர்கள் மதுரை மாநகரத்திற்கு 22.01.2025 அன்று வருகை வருகை தர இருக்கிறார். அன்றைய தினமே மதுரையிலிருந்து புறப்பட்டு செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர மாவட்ட எல்லைக்குள் 22.01.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகளங்கள் பறக்க மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதிக்கப்படுகிறது.எனவே, 22.01.2025 அன்று தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Tags : மதுரையில் வருகிற 22 ம் தேதி ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.