வால்பாறை சிங்கோனா தேயிலை ஆராய்ச்சி அலுவலர் வீட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானைகள் .

by Editor / 20-01-2025 03:39:51pm
வால்பாறை சிங்கோனா தேயிலை ஆராய்ச்சி அலுவலர் வீட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானைகள் .

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழகத்திற்குசொந்தமான உபாசி தேயிலை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வரும் ஆராட்சி மைய அலுவலர் அனுஷ்பாபு என்பவரின் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் நுழைந்த ஒற்றை காட்டுயானை வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் பர்னிச்சர்களை உடைத்து தள்ளியதோடு அடுத்துள்ள சமையல் அறையில் புகுந்து அங்குள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்களை இழுத்து சேதப்படுத்தியுள்ளது இச்சம்பவத்தின் போது வால்பாறை டவுனுக்கு  சென்று திரும்பி வீட்டருகே வந்த போது யானை வீட்டை உடைப்பதை நேரில் பார்த்த அவர் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டுயானையை அருகே உள்ள வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர் இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் மேலும் இதேபோல வால்பாறை அருகே உள்ள கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் நுழைந்த எட்டு காட்டுயானைகள் கொண்ட கூட்டம் அங்குள்ள என்பவரின் ஈஸ்வரன் கயல்விழி என்பவரின் தள்ளுவண்டி கடையை உடைத்து செதப்படுத்தியுள்ளது  இந்நிலையில் கவர்க்கல், சிங்கோனா, தாய் முடி, பன்னிமேடு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருவதால் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : வால்பாறை சிங்கோனா தேயிலை ஆராய்ச்சி அலுவலர் வீட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானைகள் .

Share via

More stories