40-40 இது 20 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நமக்குப் பெற்றுத் தந்த வெற்றி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை வென்றுள்ளது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த நிலையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் , திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது.
நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. கடந்த 2004ம் ஆண்டு, 20 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நமக்குப் பெற்றுத் தந்த வெற்றி இது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த தேர்தலில் அந்த ஒன்றையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை நாம் வென்றுவிட்டோம்.
இரண்டாவது தேர்தலில், முழுமையான வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும். ஒரு சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் லேசாக மாறி இருந்தால் I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.
அதே நேரத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையை மட்டுமல்ல, ஆட்சி அமைக்கத் தேவையான அளவுக்கு செல்வாக்கைக்கூட பாஜக அடைய வில்லை. 370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240-க்கு இறங்கிவிட்டது பாஜக” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்