தமிழ்நாட்டில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் தவறான தகவல்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற தகவல் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் விளக்கமளித்தார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற தவறான தகவல் பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ளதாக கூறப்பட்டது. இந்த கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மத்திய அரசும், மாநில அரசுகளும் தெரிவித்திருந்தன.
மேலும் இந்த கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Tags : தமிழ்நாட்டில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் தவறான தகவல்.