பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிகாரி

உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்ட நன்னடத்தை அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை மாவட்ட நன்னடத்தை அதிகாரி ராம்நாத் ராம் மானபங்கம் செய்தார். பெண் ஊழியரின் உடம்பில் கைகளை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சியின் மீடியா செல் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இது குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை நடைபெற்று வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த பதைபதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :