முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்.

மத்திய திட்ட குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24) நடைபெற உள்ளது. இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். முந்தைய ஆண்டுகளில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், இன்று (மே 23) காலை 10 மணிக்கு டெல்லி செல்ல இருக்கிறார்.
Tags : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்