செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

by Staff / 29-09-2023 04:05:52pm
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், செந்தில் பாலாஜியின் காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo