மனைவியை கொலை செய்த கணவர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (38) இவரது மனைவி முனீஸ்வரிக்கும் (32) இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தனது மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக வீட்டின் அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியது தெரிய வந்துள்ளது
.உடனடியாக மனைவியை கொலை செய்த கணவர் பொன்னுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார் அவரை கைது செய்தனர். கட்டிய மனைவியை கணவனே எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :