.100 இருந்தால் போதும்... எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம்
சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு ‘பாஸ்’ திட்டம் கொண்டு வரப்பட்டது.
கடந்த 2015ம் ஆண்டு ரூ.100 கட்டணத்தில் தினசரி பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பயணிக்கும் நபர் ரூ. 100 செலுத்தி பாஸ் மற்றும் ரூ. 50 செலுத்தி பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். நீங்கள் அன்றைய நாள் பயணத்தை முடிக்கும் போது ரயில் நிலைய கவுண்டரில் பயண அட்டையை திருப்பி கொடுத்து விட்டு உங்களின் ரூ.50-யை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் மாநகர பேருந்துகளிலும் இத்தகைய பாஸ் திட்டம் உள்ளது.
ஆனால் அதில் யார் டிக்கெட் பெறுகிறார்களோ அவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் ஆனால் மெட்ரோ ரயிலில் அவ்வாறு கிடையாது. அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பயணிலாம். ஒரு மாதம் முழுவதும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ரூ.2,500 செலுத்தி மாதாந்திர பாஸ் பெறலாம். அத்துடன் பயண அட்டைக்கான கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். நடைமுறையில் உள்ள இந்த “பாஸ்” திட்டம் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Tags :