பிரதமரை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

by Staff / 19-12-2023 11:43:41am
பிரதமரை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள நிவாரண பணிகள் குறித்து பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். இந்தியா கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதனைத்தொடர்ந்து இன்று இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மீட்பு, நிவாரணம் குறித்தும் இருவரும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

 

Tags :

Share via

More stories