அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒருவாரமாகவே துரைமுருகனுக்கு சளித்தொல்லை இருந்துள்ளது. நேற்று இரவு சளித்தொல்லை அதிகமாக இருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சளித்தொல்லைக்கு சிகிச்சை எடுத்துவிட்டு இன்று மாலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
Tags :