அதிகாலையில் ரேசன் அரிசி கடத்திய கும்பல்: லோடு வேன் - 50 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

by Editor / 22-08-2024 09:30:48am
அதிகாலையில் ரேசன் அரிசி கடத்திய கும்பல்: லோடு வேன் - 50 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

மதுரை கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விசுவாசபுரி தெருவில் இயங்கி வரும் ஜனதா கூட்டுறவு பண்டக சாலையில் இன்று அதிகாலை லோடு வேனில் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது.

லோடு வேனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி கொண்டு செல்ல முயன்றது‌ விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லோடு வேனையும் அதில் இருந்த 50மூட்டை ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்த கரிமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags : 50 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

Share via

More stories

Logo