கும்பம் ராசி

by Admin / 01-05-2024 05:45:13pm
 கும்பம் ராசி

சூரியன் 03ல் இருப்பதால் குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகமும், மகிழ்ச்சியும் ஏற்படும். மனதிற்கு விருப்பமானவர்களின் ஆதரவு தெளிவினை ஏற்படுத்தும். செவ்வாய் ராசியில் இருப்பதால் எதிலும் முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். சித்திரை 09 முதல் செவ்வாய் 02ல் இருப்பதால் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். புதன் 02ல் இருப்பதால் கமிஷன் தொடர்பான துறைகளில் விவேகம் வேண்டும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தடுமாற்றம் ஏற்படும். சித்திரை 23 முதல் புதன் 03ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் 02ல் இருப்பதால் மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சித்திரை 12 முதல் சுக்கிரன் 03ல் இருப்பதால் தனிப்பட்ட கருத்துகளை கூறுவதில் விவேகம் வேண்டும். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். குரு 03ல் இருப்பதால் போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சித்திரை 18 முதல் குரு 04ல் இருப்பதால் அயல்நாடு தொடர்பான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். சனி ராசியில் இருப்பதால் கட்டுமானத் துறைகளில் சில ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். ராகு 02ல் இருப்பதால் தன நெருக்கடிகளால் மனதில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். கேது 08ல் இருப்பதால் நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். 

 

Tags :

Share via