மீனம் ராசி-மே மாதம்

by Admin / 01-05-2024 05:46:27pm
மீனம் ராசி-மே மாதம்

சூரியன் 02ல் இருப்பதால் கால்நடைகளின் மூலம் சில விரயங்கள் உண்டாகும். செவ்வாய் 12ல் இருப்பதால் ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் கவனத்துடன் செயல்படவும். சித்திரை 09 முதல் செவ்வாய் ராசியில் இருப்பதால் பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. புதன் ராசியில் இருப்பதால் உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சித்திரை 23 முதல் புதன் 02ல் இருப்பதால் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். சித்திரை 12 முதல் சுக்கிரன் 02ல் இருப்பதால் புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். குரு 02ல் இருப்பதால் தொழிலில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சித்திரை 18 முதல் குரு 03ல் இருப்பதால் புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். சனி 12ல் இருப்பதால் எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். ராகு ராசியில் இருப்பதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். கேது 07ல் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுசரித்துச் செல்லவும். 

 

Tags :

Share via