உலகின் மெதுவான மொபைல் இணைய வேகத்தில் இந்தியா
பிரபல VPN பிராண்ட் Surfshark நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியா உலகின் மெதுவான மொபைல் இணைய வேகத்தைக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் குவாலிட்டி ஆஃப் லைஃப் ஆய்வின்படி இந்தியா, மொபைல் இணைய வேகத்தில் 110 நாடுகளில் 59 வது இடத்தில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இரண்டு இடங்கள் பின் தங்கியுள்ளது. சர்ஃப் ஷார்க் ஆய்வின்படி உலகெங்கிலும் உள்ள 6.9 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது இண்டர் நெட்டை பயன்படுத்துகின்றனர்.இன்டர்நெட் மலிவு விலையில் கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 47 வது இடத்திலும், இன்டர்நெட் தர வரிசையில் 67 வது இடத்திலும், எலக்ட்ரானிக் உள்கட்டமைப்பில் 91 வது இடத்திலும், எலக்ட்ரானிக் பாதுகாப்பில் 36 வது இடத்திலும், எலக்ட்ரானிக் அரசாங்கத்தில் 33 வது இடத்திலும் உள்ளது.
மின்னணு உள்கட்டமைப்பின் அடிப்படையில் இந்தியா பங்களாதேஷை விட குறைவாகவே உள்ளது. இணைய மலிவு, இணைய தரம் மற்றும் மின்னணு அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் உயர்ந்து காணப்படுகிறது. இந்தியாவின் மின்னணு பாதுகாப்பு கடந்த ஆண்டை விட தற்போது சீனாவை விட கிட்டத்தட்ட 76 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக தெரிகிறது.ஆய்வின்படி, இணையத்தைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்தியா 95 வது இடத்தில் உள்ளது. கடந்த வருடத்தில் இருந்து இணையச் செலவு 75 சதவிகிதம் குறைந்து, இந்தியா 47 வது இடத்தில் உள்ளது.
இன்று, இந்தியாவில் உள்ள மக்கள் மலிவான 1 GB டேட்டா பேக்கை வாங்க 1 நிமிடம் 15 வினாடிகள் அதிகமாக உழைக்க வேண்டும். இது 2020 ஆண்டு உடன் ஒப்பிடும்போது 40 வினாடிகள் அதிகம்.
ஒட்டுமொத்த மதிப்பெண்களை வைத்து பார்க்கும்போது, டென்மார்க் தென் கொரியா மற்றும் பின்லாந்துக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. பட்டியலில் கடைசி நாடுகள் எத்தியோப்பியா, கம்போடியா, கேமரூன், குவாத்தமாலா மற்றும் அங்கோலா ஆகியவை அடங்கும்.
Tags :