தேர்வில் காப்பி அடித்தால் ஆயுள் தண்டனை

by Staff / 13-02-2023 03:21:27pm
தேர்வில் காப்பி அடித்தால் ஆயுள் தண்டனை

தேர்வில் முறைகேடு செய்தால் கடுமையான தண்டனை விதிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. மோசடியில் சிக்கினால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், சொத்துகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவு மற்றும் ஊழலைத் தடுக்க வலுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார். இது தொடர்பான அவசரச் சட்டத்தில் உத்தரகாண்ட் ஆளுநர் குர்மித் சிங் கடந்த நாள் கையெழுத்திட்டார்.

 

Tags :

Share via

More stories