சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஆலோசனை

9 நாட்கள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அங்குள்ள தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா உடன் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அதிகாரிகள், அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
Tags :