தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

by Staff / 27-01-2024 02:19:54pm
தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் எஸ் பி சாமிநாதன் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத் துறையின் தெற்கு மண்டல எஸ். பி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திருப்பூர் சிட்டி துணை காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த அபிஷேக் குப்தா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல காத்திருப்போர் பட்டியலில் இருந்து சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேகரிலா செபாஸ் கல்யாண் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல தமிழக முழுவதும் 11ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo