850 கோடி கஞ்சா போலீசார் தீ வைத்து எரிப்பு

ஆந்திராவில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் தனிப்படை அமைத்து ஆப்ரேஷன் தொடங்கப்பட்டது.
தனிப்படை போலீசார் ஆந்திராவில் விசாகப்பட்டினம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தீவிர வாகனகண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட 2 லட்சம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ 850 கோடியாகும். கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அனைத்தும் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பெரிய மைதானத்தில் வைத்து 12 இடங்களில் மலைபோல் குவித்தனர்.
ஆந்திர மாநில டிஜிபி கவுதம் சவாங் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த கஞ்சாவுக்கு தீ வைத்து அழித்தார்.
கஞ்சாவுக்கு தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து ஆந்திர மாநில டிஜிபி கவுதம் சவாங் நிருபர்களிடம் கூறுகையில்.
ஆந்திரா -ஒடிசா மாநில எல்லையில் குக்கிராமங்களில் கஞ்சா பயிரிடப்பட்டு நாடு முழுவதும் பல்வேறு வழிகளில் கடத்தப்படுகிறது.
பணம் சம்பாதிப்பதற்காக நக்சலைட்டுகள் கஞ்சா வளர்க்க கிராம மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
ஒரிசாவில் 13 மாவட்டங்களிலும், ஆந்திராவில் விசாகப்பட்டினம் மலை கிராமங்களில் 11 மண்டலங்களில் கஞ்சா பயிரிடப்படுகிறது என்றார்.
Tags :