எடப்பாடி பழனிச்சாமி காணும் கனவு பலிக்காது-அமைச்சர் சேகர்பாபு
சேலம் மாவட்டம் ஓமலூரில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினரை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்து பேசினார்:ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் செயல்பட்டால் அதிமுக சட்டரீதியாக அதனை சந்திக்கும் என்றும், தேர்தல் அலுவலர்கள் நேர்மையான நடக்காவிட்டால் நாங்கள் நடக்க வைப்போம், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்க வரவில்லை, மக்களை சந்திக்க திராணியின்றி முறைகேட்டில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி மீண்டும் வெற்றி பெற திமுகவினர் முயற்சி செய்கிறார்கள், முறையாக நேர்வழியில் திமுக ஜெயித்ததாக சரித்திரமில்லை,
தமிழகத்தில் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டால் மேற்குவங்கத்தைப்போல தமிழகத்தில் சட்டப்பேரவை முடங்கும் நிலை ஏற்படலாம் என்றார்.இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு தமிழக சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்றும் அதிமுகவின் ஆசையை அவர் மத்திய அரசுக்கு தனது பேச்சின் மூலம் மறைமுகமாக தெரியப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்
சட்டசபையை முடக்கினால் தான் அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளதும் தற்போது அரசியல் வட்டாரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
