அமைச்சர் ஏ. வ. வேலு ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஏ. வ. வேலு ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை காலை 11.00 மணிக்கு மோட்டோ ஜியோ நிர்வாகிகளுடன் 11 30 மணிக்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அமைப்புகள் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அமைச்சர் குழு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் போராட்டத்தை தவிர்க்கும் முகமாக இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. அண்மையில் காகன் தீப்ஸின் தேடி தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை மற்றும் ஓய்வூதியம் குறித்த அரசு எடுத்துள்ள நிலைப்பாடு இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
Tags :

















