சீனாவில் ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்தது: 17 பேர் பலி

by Editor / 14-07-2021 04:34:09pm
சீனாவில் ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்தது: 17 பேர் பலி

 


3 மாடி ஓட்டல் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் கிழக்குச் சீன பகுதியில் சேர்ந்த சுஹாவ் நகரில் நேற்று (செவ்வாய்) மாலை நடந்துள்ளது.
அறையில் தங்கியிருந்தவர்கள், உணவு அருந்திக்கொண்டிருந்தவர்கள் என மொத்தம் 23 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்க மேற்கொண்ட பணிகள் தற்போது முடிவடைந்தன.இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் காயமின்றி தப்பினார்.
கட்டடம் எப்படி இடிந்து விழுந்தது என விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.ஓட்டலில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் நிலநடுக்க மீட்புக்குழு, 120 வாகனங்கள், தீயணைக்கும் படையினர் 600 பேர் ஈடுபட்டனர்.சுஹாவ் நகரம் சுற்றுலா நகரமாகும். இடிந்து விழுந்திருக்கும் சிஜி கையுவான் ஓட்டல் 54 அறைகளுடன் 3 மாடி கட்டிடம் 2018ல் திறக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories