ரஃபேல் வாட்ச் பில்லை காட்டினார் அண்ணாமலை

by Staff / 14-04-2023 11:58:55am
ரஃபேல் வாட்ச் பில்லை காட்டினார் அண்ணாமலை

ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான பில்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். காவல்துறை பணியில் இருந்தபோது லஞ்சப்பணத்தில் இந்த வாட்சை வாங்கியதாக திமுகவினர் அவதூறு பரப்பினர். ஆனால் நான் மே 7ஆம் தேதி ரஃபேல் வாட்ச் வாங்கினேன். இந்தியாவில் இரண்டு கை கடிகாரங்கள் தான் விற்கப்பட்டிருக்கிறது, ஒரு வாட்ச் என்னிடமும் மற்றொரு வாட்ச் மும்பையில் உள்ள நண்பரிடம் உள்ளது. ஒரு சாமானியனாக நான் கேள்வி கேட்கிறேன். என் உதவியாளர்களுக்கான சம்பளத்தை என்னுடன் படித்த நண்பர்களே கொடுக்கின்றனர் என்றார்.

 

Tags :

Share via