நாட்டில் முதல்முறையாக டிரோன் மூலம் தவல் வினியோகம்

நாட்டில் முதல் முறையாக குஜராத்தில் டிரோன் மூலம் தபால்களை இந்திய அஞ்சல் துறை அனுப்பியுள்ளது.காட்ஸ் மாவட்டத்தில் உள்ள ஹாபே கிராமத்தில் இருந்து டிரோன் மூலம் நேர் கிராமத்திற்கு தபால் தலை இந்திய அஞ்சல் துறை அதிகாரிகள் அனுப்பினர். மத்திய தகவல் தொடர்புத் துறையின் வழிகாட்டுதலின்படி சோதனை அடிப்படையில் செலுத்தபட்ட டிரோன் 46 கிலோ மீட்டர் தூரத்தை 25 நிமிடங்களில் கடந்து மருத்துவ பார்சலை டெலிவரி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரோன் மூலம் தபால் விநியோகம் முயற்சி வெற்றி பெற்ற நிலையில் வருங்காலத்தில் டிரோன்களை பயன்படுத்தி தபால்களை விநியோகிக்க இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
Tags :