சிறையில் கைதி தற்கொலை மிரட்டல்.

by Staff / 20-02-2023 05:10:19pm
சிறையில் கைதி தற்கொலை மிரட்டல்.

மதுரை மத்திய சிறையில் கைதியாக மகேஷ் சண்முகம் என்பவர் உள்ளார். இவர் மாலை அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவருக்கும், சக கைதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயில் காவலர்கள் கண்ணன், பாண்டியன் ஆகியோர் மகேஷ் சண்முகத்தை சிறைக்குள் அடைக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த மகேஷ் சண்முகம், போலீஸ்காரர் கண்ணனை தாக்கி அவரது சட்டையை கிழித்தும் கீழே தள்ளிவிட்டுள்ளார்.இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மகேஷ் சண்முகம் அடுத்த நாள் மதியம் விசாரணை தொகுதிக்கு சென்று பணியிலிருந்த சவரத் தொழிலாளியின் கத்தியை பிடுங்கி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo