கேப்டன் டாட்டூ: உலக சாதனை படைக்கும் தொண்டர்கள்

by Staff / 24-08-2024 01:45:43pm
கேப்டன் டாட்டூ: உலக சாதனை படைக்கும் தொண்டர்கள்

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் 72வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர். டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார்.

 

Tags :

Share via