700 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - 6 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்றிரவு (மே 23) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஒரு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில், 700 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாக்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் இருந்த ஆறு பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















