விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா பதவியேற்றுக் கொண்டார்

by Editor / 16-07-2024 01:16:48pm
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  அன்னியூர் சிவா பதவியேற்றுக் கொண்டார்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, எம்.எல்.ஏ.வாக இன்று (ஜுலை 16) பதவியேற்றார். சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.பேரவைத் தலைவர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

Tags : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா பதவியேற்றுக் கொண்டார்

Share via

More stories