புதிய பிரதமர் கொடியேற்ற வேண்டும் என்றால் திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள், லியோனி பேச்சு.

by Editor / 17-04-2024 12:32:49am
புதிய பிரதமர் கொடியேற்ற வேண்டும் என்றால் திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள், லியோனி பேச்சு.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷ் ஆதரித்து நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 

பிரதமர் நரேந்திர மோடி கவர்ச்சிகரமான பேச்சுக்களால் பத்தாண்டு காலம் கடந்துள்ளார். பெண்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு விவசாயிகளின் வருமானத்தைக் கூட்டுவது 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்டவைகளை 2047 வழங்குவதாக பிரதமர் கூறுகிறார். அப்போது நாம் உயிருடன் இருப்போமா 10 ஆண்டுகள் ஏமாற்றிய பிரதமர் மீண்டும் நம்மை ஏமாற்ற பார்க்கிறார் இந்தியா கூட்டணியில் புதிய பிரதமர் வரும் ஆகஸ்ட் 15 செங்கோட்டையில் கொடியேற்றுவார் பிரதமர் மோடி மீண்டும் கொடியேற்ற மாட்டார். மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி அநீதி இழைத்த நிலையில் அங்கெல்லாம் போய் மக்களை சந்திக்காத பிரதமர் தமிழகத்திற்கு இன்று ஓட்டு கேட்பதற்காக மட்டும் வருகிறார். புதிய பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்ற வேண்டும் என்றால் திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பேசினார்..

 

Tags : புதிய பிரதமர் கொடியேற்ற வேண்டும் என்றால் திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள், லியோனி பேச்சு.

Share via

More stories