ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று நபர்கள் தற்கொலை காவல்துறை விசாரணை.

by Editor / 27-09-2024 11:27:52pm
ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று நபர்கள் தற்கொலை காவல்துறை விசாரணை.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆய்க்குடி பேரூராட்சி கம்பளி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் முருகேசன் 50 வயதான இவர் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் பணியாற்றிய பொழுது விபத்து ஒன்றில் சிக்கியதால் சுயநினைவு இழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது  குணமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும் முதுகு தண்டாவாடாத்தில்  தொடர் வலி இருந்துவந்ததாகவும் கூறப்ப்டுகிறது.இந்த நிலையில் 26 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இதன் தொடர்ச்சியாக அவரது மகன் இன்று திருநெல்வேலியில் இருந்து வந்து தந்தையை காணவில்லை என தேடி உள்ளார் மேலும் தனது தாத்தா பரமசிவம் பாட்டி மாடத்திஅம்பாள்  இருக்கும் தோட்டத்திற்கு சென்று இரவு 8 மணி அளவில் பார்த்துள்ளார். அங்கே தாத்தா பரமசிவமும் பாட்டி மாடத்தி அம்பாளும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர் இதன் தொடர்ச்சியாக அந்த அறைக்குள் சென்று பார்த்த பொழுது தந்தை முருகேசனும் இறந்து கிடந்துள்ளார் மேலும் அருகில் பழம் மற்றும் குருணை மருந்து உள்ளிட்டவைகள் சிதறி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஆய்க்குடி போலீசார்க்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார் மூன்று பேர் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ச்சியாக தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர்  இந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர், இதில் விபத்தில் படு காயம் அடைந்த முருகேசன் கொஞ்ச நாளாகவே மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகின்றது இதன் காரணமாக அவரது தாய் தந்தையரோடு சேர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, ஒரே மகனோடு சேர்ந்து அவரது தாயும் ,தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று நபர்கள் தற்கொலை காவல்துறை விசாரணை.

Share via