திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு தள்ளிவைப்பு
திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைபார்த்த பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினாவை கடந்த மாதம் 25ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமீன் கோரிய மனுவில், தவறாக அளிக்கப்பட்ட புகாரில் ஒரு மாதமாக சிறையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
