கிணறு தோண்ட வைக்கப்பட்ட டெட்டனேட்டர் வெடித்ததில் 3 தொழிலாளிகள் பலி

by Editor / 16-02-2023 10:15:50am
 கிணறு தோண்ட வைக்கப்பட்ட டெட்டனேட்டர் வெடித்ததில் 3 தொழிலாளிகள் பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும்போது வைக்கப்பட்ட வெடி, வெடித்ததில் ஆலங்குளம் அருகே உள்ள ஆணையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அரவிந்த் (21) சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 ஆலங்குளம் அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டும் பணியை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார்.  கிணறு வெட்டும் ஒப்பந்த பணியினை காளத்திமடம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது ஊழியர்களுடன் மேற்கொண்டு வந்தார். கடந்த 10 தினங்களாக மண் பகுதியை தோண்டி எடுத்த தொழிலாளர்கள் இன்று காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  டெட்டனேட்டர்  வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் என்ற 21 வயது தொழிலாளி நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார், படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆசிர் சாம்சன் என்ற தொழிலாளியும் உயிரிழந்தார்.ஆலங்குளம் கிணறு தோண்ட டெட்டினேட்டர் வெடித்த விபத்தில் ராஜலிங்கம் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via
Logo