ஜல்லிக்கட்டு - QR code, ஆதார் எண்ணுடன் டோக்கன்

by Editor / 13-01-2023 08:43:27pm
ஜல்லிக்கட்டு - QR code, ஆதார் எண்ணுடன் டோக்கன்

மதுரையில் ஜன.15,16,17 தேதிகளில் நடைபெறவுள்ள மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 9699 காளைகளும், 5,399 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 15,098 விண்ணப்பங்கள் பதிவாகியிருந்தன.இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு டோக்கன் தரவிறக்கம் செய்யும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.டோக்கனில் போட்டியாளர்/காளை உரிமையாளர் பெயர் மற்றும் போட்டோ, அனுமதி சீட்டு எண், போட்டி நடைபெறும் இடம், கைபேசி எண், ஆதார் எண் ஆகிய விபரங்களுடன் சேர்த்து QR code இணைக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால் போட்டியின் போது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் தடுக்கப்படும்.

 

Tags :

Share via

More stories