ரோடு ஷோ நடத்தும் மோடி..மக்களை ரோட்டில் விட்டு விடுவார்

by Staff / 17-04-2024 01:34:36pm
ரோடு ஷோ நடத்தும் மோடி..மக்களை ரோட்டில் விட்டு விடுவார்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பத்தாண்டுகளாக ஆட்சி செய்த மோடி, தமிழ்நாட்டிற்கு எதாவது செய்துள்ளாரா? பேரிடர் நிதியாக ஒரு பைசா கூட அவர் தரவில்லை. பிரதமரை பெயர் சொல்லி அழைக்காமல், 29 பைசா என அழைக்க வேண்டும். தமிழ்நாடு ஒரு ரூபாய் வரி தந்தால், ஒன்றிய அரசு வெறும் 29 பைசா தான் தருகிறது. பிரதமர் கோவைக்கு வந்து ரோடு ஷோ செய்தார். போகும் இடமெல்லாம் ரோடு ஷோ தான். கடைசியில் மக்களை ரோட்டில் விட்டு விடுவார் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo