கிரிப்டோகரன்சி தொடர்பான குற்றங்களில் விசாரணைக்கு உதவும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சகம் வெளியீடு

by Staff / 03-04-2022 01:13:24pm
கிரிப்டோகரன்சி தொடர்பான குற்றங்களில் விசாரணைக்கு உதவும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சகம் வெளியீடு

கிரிப்டோகரன்சி தொடர்பான குற்றங்களில் விசாரணைக்கு உதவும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது .

காவல்துறை போன்ற புலனாய்வு நிறுவனங்கள் தங்கள் சொந்த கிரிப்டோ வாலட்  பராமரிக்க வேண்டும் அதில் இணையவழி பறிமுதல் செய்த சொத்துக்களை சேமிக்கவேண்டும் குற்றத்தின் முழுப் பின்னணியும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

சைபர் குற்றங்கள் குறிப்பாக கிரிப்டோகரன்சி தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கும் சூழலில்  கிரிப்டோ வாலட்  மூலம் சேகரிக்கப்படும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிரிப்டோகரன்சி தொடர்பான குற்றங்களை கையாளுவது குறித்து எந்தவித வழிகாட்டுதலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories