அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்கல்களை இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார். .
ஈரான் மீதான தாக்கல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஏப்ரல் 7-ந் தேதி அவர் நினைத்த காலக்கோடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈரான் தனது கடல் எல்லையில் உள்ள ஹார்முஸ் நீரிணையை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரிப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது .ஈரான் தரப்பிலிருந்து ஒரு பத்து அம்ச அமைதி திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது .இது பேச்சுவார்த்தைக்கு உகந்த அடிப்படையாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான நிரந்தர ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக,ஈரான்தடை செய்யப்பட்டிருந்த வர்த்தகக் கப்பல்களுக்கான முக்கிய கப்பல் வழித்தடத்தை மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டுள்ளது .
Tags :



















