தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்காக 1,032 கோடி நிதி ஒதுக்கீடு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாய

by Admin / 08-04-2026 01:11:13am
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்காக 1,032 கோடி நிதி ஒதுக்கீடு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாய

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் , தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்காக 1,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இது கடந்த 2021 தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட 795.கோடியை விட கூடுதலாகும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏப்ரல் 13-ஆம் தேதி கூடுதல் துணை ராணுவப் படையினர் தமிழகம் வரவுள்ளதாகவும் ஏற்கனவே 50 கம்பெனி படையினர் வந்துள்ள நிலையில் மீதமுள்ள 250 கம்பெனி வீரர்கள் விரைவில் வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 5,938 வாக்கு சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்றும் மே 4-வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo