ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதல்வர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அரசுமுறைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க பயணத்தின் போது கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் அதிகாரிகள் செல்லவுள்ளனர்.
Tags :



















