தமிழ்நாட்டில் 18 கிளைச் சிறைகளை மூட உத்தரவு

மதுராந்தகம், திருத்தணி, ஆரணி, போளூர், செய்யாறு, கீரனூர், மேட்டுப்பாளையம், ராசிபுரம், கடலூர், பரமத்திவேலூர், மணப்பாறை, முசிறி, திருமயம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 18 கிளைச் சிறைகளை மூட சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பழுதடைந்த நிலையிலுள்ள, போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருக்கும் சிறைகளை மூட உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags :