மாற்றமில்லாமல் தொடரும் வட்டி விகிதம்

by Editor / 10-02-2022 03:24:36pm
மாற்றமில்லாமல் தொடரும் வட்டி விகிதம்

மாற்றமில்லாமல் தொடரும் வட்டி விகிதம்

ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கை கூட்டம் இன்று நடைபெற்றது. இது பட்ஜெட்டுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து உயர்வு வருவதாலும், சர்வதேச அளவில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்திவருவதாலும் ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டாம் என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. பணவீக்கம் உயர்ந்து காணப்பட்டாலும் எதிர்பார்த்த அளவில்தான் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

எனவே பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வங்கிகளுக்குக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாகவே தொடர்கிறது.

மேலும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவிகிதமாகவே தொடர்கிறது. மேலும் ஜிடிபி விகிதம் 7.8 சதவிகிதமாக உள்ளது. 2021-22 நிதி ஆண்டுக்கான பணவீக்கம் 5.3 சதவிகிதமாக உள்ள நிலையில், 2022-23 நிதி ஆண்டில் நுகர்வோர் பணவீக்கத்தை 4.5 சதவிகிதத்துக்குள் வைக்க இலக்கு வைத்துள்ளது.

2020 மே 22-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் வட்டி விகிதத்தை வரலாற்றில் அதுவரை இல்லாத அளவுக்கு ரிசர்வ் வங்கி குறைத்தது. ஆனால் அதன்பிற்கு பல முறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து வட்டி விகிதங்களில் எந்த மாற்றங்களையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. இந்த முறையும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் , 20 மாதங்களாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.

 

 

Tags :

Share via