தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

by Editor / 10-02-2022 03:19:31pm
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

குமரிகடலோரப்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

 நாளை தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர்,ஆகிய  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பிப்ரவரி 12ஆம் தேதி அன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தேனி திண்டுக்கல் நீலகிரி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 பிப்ரவரி 13 14 ஆகிய நாட்களில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


 

 

Tags : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

Share via

More stories

Logo