புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களால் பெண்களை துன்புறுத்தி வந்த நபர் கைது...

by Admin / 27-12-2021 02:59:42pm
புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களால் பெண்களை துன்புறுத்தி வந்த நபர் கைது...

மண்டியா மாவட்டம் ஹலகூர் கிராமத்தை சேர்ந்த 30 வயதான ஸ்ரீகாந்த் என்பவருக்கு திருமணம் ஆன நிலையில் தனது மனைவியோடு பெங்களூருவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கார் தயாரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இவர் முகநூல் பக்கத்தில் அஞ்சலி என்ற பெண் பெயரோடு கூடிய போலி கணக்கை தொடங்கி அதில் இருந்து பெண்களை தேடி மட்டுமே நண்பர்களாக இருக்க அழைப்பு விடுத்து இருந்துள்ளார்.

இதில் அவரது அழைப்புகளை ஏற்று கொண்ட பெண்களிடம் ஆபாசமாக பேசத் தொடங்கி நாளடைவில் ஆபாச விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்தது.

இந்த முகநூல் பக்கத்தில் இதுபோன்று இவர் 20 பெண்களிடம் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.அதில் இவரின் நண்பர் அழைப்பை ஏற்று கொண்ட பெண் ஒருவர் அவர் வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்தவராக இருந்துள்ளார். 

அந்தபெண் ராம் நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீகாந்த்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் இது குறித்து விசாரணைகளை அவரிடம் மேற்கொண்டு வருவதாக போலீசாரிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 

Tags :

Share via

More stories

Logo