டி.ஆர். பாலு எம்.பியின் மனைவி ரேணுகா தேவி காலமானார்.

by Staff / 19-08-2025 09:31:12pm
 டி.ஆர். பாலு எம்.பியின் மனைவி ரேணுகா தேவி காலமானார்.

திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு எம்.பியின் மனைவி ரேணுகா தேவி (79) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டி.ஆர்.பாலு - ரேணுகா தேவியின் மகன் டி.ஆர்.பி.ராஜா தமிழக தொழில்துறை அமைச்சராக உள்ளார். ரேணுகா தேவி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags : டி.ஆர். பாலு எம்.பியின் மனைவி ரேணுகா தேவி காலமானார்.

Share via

More stories