சாலை விபத்து.. மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரிடம் விசாரணை

மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் செல்வக்குமாரை, கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் கூறினர். மேலும், ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கார் விபத்து குறித்து பேசியிருந்த மதுரை ஆதீனம், தன்னை கொல்ல சதி என குற்றச்சாட்டியிருந்தார். ஆனால், ஆதீனம் சென்ற கார் மீது தான் தவறு இருப்பதாக மற்றொரு கார் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.
Tags :