தரமற்ற நீரை விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை சில விதிகளை வெளியிட்டுள்ளது.
வெயில் காலத்தில் குடிநீர் தேவை அதிகரிப்பை பயன்படுத்தி தரமற்ற நீரை விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை சில விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐஎஸ்ஐ முத்திரை கேள்களில் பி. ஐ. எஸ் மற்றும் எப். எஸ். எஸ். ஐ அங்கீகாரம் பெற்ற லேபில்கள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றும் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி காலமாதியாகும் தேதி மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் முகவரி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கேன்கள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு கசிவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததோடு இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு 5,000 அபராதம் விதிப்பதோடு தேவைப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :



















