ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி

by Staff / 20-01-2023 01:16:07pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க பாஜக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது, இந்த தொகுதி கூட்டணி கட்சியான ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ்-க்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று இது தொடர்பாக ஜி.கே. வாசனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தனர்.

 

Tags :

Share via

More stories