மதுரையில் பரவலாக வெளுத்து வாங்கும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

by Editor / 25-10-2024 08:30:39pm
மதுரையில் பரவலாக வெளுத்து வாங்கும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கடலூர், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா நகர் , காமராஜர் சாலை ,அனுப்பானடி, ஜெய்ஹிந்த்புரம் விளக்குத்தூண் தெற்கு வாசல் வில்லாபுரம் அவனியாபுரம் பழங்காநத்தம் காளவாசல் ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து.

இன்று காலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து இருட்டாக காணப்பட்ட நிலையில்  பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தேங்கியது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.தீபாவளிக்கு விளக்குத்துண் பகுதிகளில் திடீரென முளைத்த கடைள் இந்த மழையினால் வியாபாரம் இன்றி பெரிதும் பாதித்து வருவதாக கூறினர்.

 

Tags : மதுரையில் பரவலாக வெளுத்து வாங்கும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

Share via