ஜப்பானின் பெண் பிரதமர்  சனே தகைச்சி கட்சி அபார வெற்றி

by Admin / 09-02-2026 09:04:09am
ஜப்பானின் பெண் பிரதமர்  சனே தகைச்சி கட்சி அபார வெற்றி

ஜப்பானில் நேற்று நடைபெற்ற 465 தொகுதிகளுக்கான தேர்தலில் பெண் பிரதமர்  சனே தகைச்சி கட்சி, கூட்டணி கட்சியான இன்னோவேஷன் கட்சியும் இணைந்து போட்டியிட்ட 465 இடங்களில் 316 இடங்களை லிபரல் டெமோ கட்சி கைப்பற்றி பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றுள்ளது. 2025 அக்டோபர் 21ஆம் தேதி ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பிரதமராக பதவியேற்றார். தங்கள் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவை திரட்ட பதவியேற்ற 10 நாட்களில் தேர்தலை அறிவித்தார். வரி குறைப்பு, ராணுவ செலவினங்களை அதிகரித்தல் மற்றும் சீனாவுடனான உறவுகளில் கடுமையான நிலைப்பாடு போன்ற கொள்கைகளை முன்வைத்து அவர் இந்த தேர்தலை சந்தித்தார். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜப்பானிய அரசின் ஒரு கட்சி மிகப்பெரிய தனிப்பெரும்பான்மையை பெற்று இருப்பது வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மகத்தான வெற்றியைப் பெற்ற ஜப்பான் பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிnஉள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo